டொனால்ட் ட்ரம்பிற்கான தேசிய பாதுகாப்பு அதிகரிப்பு’!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தாமஸ் மேத்யூ என்ற 20 வயது அமெரிக்க இளைஞரால் இந்த படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பென்சில்வேனியா படுகொலை முயற்சிக்கும் ஈரானால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் படுகொலைச் சதித்திட்டத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் இதுவரை கண்டறியப்படவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் கடுமையாக மறுத்துள்ளது.