வியாபாரத்தில் லாபமடையும் மூன்று ராசிக்காரர்கள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
வியாபாரத்தில் லாபமடையும் மூன்று ராசிக்காரர்கள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் உயரும். பரணி: சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சி இன்று வேண்டாம்.கார்த்திகை 1: உங்களால் லாபம் அடைந்தவர்கள் தேடிவந்து உதவி செய்வார்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எண்ணியது நிறைவேறும் நாள். ஆரோக்கியம் சீராகும். பொருளாதார நிலை உயரும்.ரோகிணி: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பழைய பிரச்னை மீண்டும் தோன்றும். கவனம் தேவை.மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைப்பட்ட வேலை நடக்கும். பயணத்தால் நன்மை உண்டு.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: சொத்து விவகாரம் பற்றி பேசி தீர்வு காண்பீர். உறவினர் உதவியுடன் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்.திருவாதிரை: உடல் நிலையில் சங்கடம் தோன்றும். வியாபாரத்தில் எதிர்ப்பு வலுக்கும். உடன் இருப்பவரை அனுசரித்துச் செல்வது நல்லது.புனர்பூசம் 1,2,3: விவகாரம் சாதகமாகும். எதிர்ப்பு விலகும். வியாபாரம் லாபமாகும். நேற்றைய பிரச்னை முடியும்.

கடகம்

புனர்பூசம் 4: நீங்கள் ஈடுபடும் வேலையில் வெற்றி பெறுவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு ஏற்படும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழில் எதிரி விலகுவர்.ஆயில்யம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். முயற்சி தள்ளிப்போகும். நம்பிக்கையோடு மேற்கொண்ட வேலையும் இழுபறியாகும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் உழைப்புக்கேற்ற லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.பூரம்: உங்களைச்சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்துகொள்வீர். அதிரடியாக ஒரு செயலில் இறங்குவீர். உத்திரம் 1: நினைத்ததை நினைத்தபடி நடத்துவீர். வியாபாரத்தை விரிவு செய்வீர். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: தடைகளைத்தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். சகோதரர் வழியில் அனுகூலம் உண்டாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் சிறு தடை தோன்றும். பணியாளர்களால் சங்கடம் தோன்றும். வேலைகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.சித்திரை 1,2: தொழிலில் போட்டியாக இருந்தவர் விலகிச் செல்வர். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.சுவாதி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற வேலைகளைத் தவிர்ப்பது நல்லது.விசாகம் 1,2,3: புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு வெற்றி காண்பீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: மனக்குழப்பம் விலகும். நண்பர்களால் உங்கள் முயற்சி நிறைவேறும். செயல்களில் கவனம் தேவை.அனுஷம்:அலுவலக பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். கேட்டை: வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். உடன் பணிபுரிபவர்களால் நெருக்கடி உண்டாகும்.

தனுசு

மூலம்: இடம் பொருள் அறிந்து செயல்படுவீர். முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மறைமுக எதிர்ப்பு தோன்றும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.திருவோணம்: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு தக்க சமயத்தில் கிடைக்காமல் போகும்.அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று கூடுதல் வருமானம் உண்டாகும். தேவை நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4: திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். எதிர்பார்த்த வரவு வரும்.சதயம்: அவசர வேலைகள் தோன்றி உங்களை சங்கடத்திற்கு ஆளாக்கும். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் வேகம் உண்டாகும். எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். நிதிநிலை உயரும்.

மீனம்:

பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணியில் இருந்த நெருக்கடி விலகும். ரேவதி: உங்களுக்கு உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.