திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜான்வி கபூர்

#Actress #Hospital #Food #Poison #Bollywood
Prasu
1 year ago
திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜான்வி கபூர்

இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வளர்ந்து வரும் இளம் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

அழகும் கவர்ச்சியும் ஒருசேர அமைந்துள்ள ஜான்வி கபூரை தமிழிலும் விரைவில் நாயகியாக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜான்வி கபூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

நேற்றைய தினம் அவர் ஃபுட் பாய்சனிங்கால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை. 

இதனால் அவர் தன்னுடைய ப்ரொமோஷன்கள் மற்றும் ஷூட்டிங் ஆகியவற்றை கேன்சல் செய்துவிட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்தார். 

ஆனாலும் நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில், இன்றைய தினம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளைய தினம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4