மீன ராசிக்காரர்களுக்கு குலதெய்வ வழிபாட்டால் மனம் தெளிவாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
மீன ராசிக்காரர்களுக்கு குலதெய்வ வழிபாட்டால் மனம் தெளிவாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் கவனம் சிதறும். தேவையற்ற சிந்தனையால் குழப்பம் அதிகரிக்கும்.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். பெரியோரின் ஆதரவால் உங்கள் செயல் வெற்றியாகும்.கார்த்திகை 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும்.ரோகிணி: மனக்குழப்பம் விலகும். தெளிவாக செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம் அடையும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் நினைத்த விஷயம் இன்று நடைபெறும். உடன் இருந்தவர்களால் சில சங்கடம் தோன்றும்.திருவாதிரை: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். வாழ்க்கைத் துணையால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். வேலையில் எதிர்பாராத தடைகளும் தாமதமும் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: மறைமுக சூழ்ச்சிகளை அறியாமல் செயல்படுவீர். உடன் பணிபுரிபவர்களால் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.பூசம்: ஆரோக்யம் சீராகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பயணத்தால் அனுகூலம் உண்டு.

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியாமல் போகும்.பூரம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவர். வருமானம் அதிகரிக்கும். உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். ஒருசிலர் அதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: போராட்டமான நாள். வேலைபளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி லாபமாகும். பெற்றோர் ஆசியோடு ஒரு வேலையை முடிப்பீர்.சித்திரை 1,2: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் உடன்பணி புரிபவர்களுடன் பகை உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. மற்றவரின் குறையை அவர்களிடம் சொன்னால் எதிர்ப்பு உண்டாகும்.சுவாதி: உங்கள் முயற்சி வெற்றியாகும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார். சொத்து வகையில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.விசாகம் 1,2,3: திட்டமிட்டபடி செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடை தோன்றி மறையும்.

விருச்சிகம்

விசாகம் 4: பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை. கொடுத்த வாக்கை இன்று காப்பாற்றுவீர்கள்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். கேட்டை: பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும்.

தனுசு

மூலம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். மற்றவர் செய்யும் விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம்.பூராடம்: உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர்.உத்திராடம் 1: கோயில் வழிபாட்டால் நிம்மதி உண்டாகும். இன்று எந்தவொரு வேலையிலும் அவசரம் வேண்டாம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வரவை விட செலவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திருவோணம்: பிறருக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். தொழிலில் எதிர்ப்பு தோன்றும்.சதயம்: நேற்று வராமல் இருந்த பணம் வரும். பிரச்னையில் முடிவு தோன்றும். குழந்தைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பூரட்டாதி 1,2,3: திடீர் என வேலைபளு அதிகரிக்கும். திட்டமிட்டாத வேலை தள்ளிப்போகும்.கோயில் வழிபாட்டால் திருப்தி ஏற்படும்.

மீனம்

பூரட்டாதி 4: குலதெய்வ வழிபாட்டால் மனம் தெளிவாகும். உங்கள் செயலில் வேகமும் பரபரப்பும் இருக்கும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். ரேவதி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்து முன்னேற்றமடைவீர்.