பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டிய இரு ராசிக்காரர்கள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 months ago
பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டிய இரு ராசிக்காரர்கள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: யோகமான நாள். தடைப்பட்ட முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்வீர்.பரணி: கோயில் வழிபாட்டில் நலம் காணும் நாள். எந்தவொரு செயலிலும் நேரடிப் பார்வை இன்று அவசியம்.கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். மனக்குழப்பம் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். ரோகிணி: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் இன்று எதிர்ப்பு தோன்றும். உங்கள் முயற்சி தள்ளிப்போகும்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு செயல்பட நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதித்து முடிப்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.திருவாதிரை: போட்டியாளர்களால் சங்கடம் உண்டாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.புனர்பூசம் 1,2,3: சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னையில் வெற்றியுண்டாகும் எதிர்பார்த்த வரவு வரும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரம் விருத்தியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச்செல்வர். லாபம் அதிகரிக்கும்.பூசம்: கவனமுடன் செய்த முயற்சி இழுபறியாகும். நீங்கள் நினைத்தது நடக்காமல் மனம் சோர்வடையும்.ஆயில்யம்: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுபடலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும்.பூரம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.உத்திரம் 1: உங்கள் நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். நிதிநிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர். ஒருசிலர் புதிய சொத்து வாங்குவீர்.அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும். கடன்களை அடைப்பீர். அரசு வழி தடைகள் அகலும்.சித்திரை 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணத்தில் லாபம் உண்டாகும்.சுவாதி: கவனமாக செயல்படுவதால் நெருக்கடியில் இருந்து மீளுவீர். எதிர்ப்புகள் விலகும் நாள்.விசாகம் 1,2,3: வழக்கமான செயல் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: சொத்து வழியில் பிரச்னை உருவாகும். உங்களுக்கு உதவி புரிவதாக சொன்னவர் விலகிச்செல்வர்.கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் தேவை. உங்கள் செல்வாக்கு உயரும். வருமானத்தில் இருந்த தடை அகலும்.

தனுசு

மூலம்: இழுபறியாக இருந்த ஒரு வேலை நிறைவேறும். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்.பூராடம்: செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். மனம் குழப்பம் அடையும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்முன் படிப்பது நல்லது.உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய முயற்சி மேற்கொள்வீர். வருமானத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: தடைப்பட்ட வேலை நடந்தேறும். உங்கள் திறமை பளிச்சிடும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.திருவோணம்: உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.அவிட்டம் 1,2: உங்கள் முயற்சி லாபம் தரும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். சந்திர வழிபாடு சாதகத்தை உண்டாக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.சதயம்: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணியாளர்களால் சங்கடம் உண்டாகும். அமைதியான நாள்.பூரட்டாதி 1,2,3: முயற்சியில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். பணம் வரும் நாள்.

மீனம்

பூரட்டாதி 4: கோயில் வழிபாட்டில் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.தெய்வ வழிபாடு திருப்தி தரும்.ரேவதி: உங்கள் செயலில் லாபம் தோன்றும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய வேலை கிடைக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!