ரிஷப ராசியினர் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
ரிஷப ராசியினர் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்:

அசுவினி: வேலைகளில் அலைச்சல் அதிகரிக்கும். முயற்சியில் சிரமம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.பரணி: வெற்றி உண்டாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளர் விலகுவர்.கார்த்திகை 1: லாபமான நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். பெரியோர் ஆதரவு உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். விஐபிகள் ஒத்துழைப்பால் முயற்சி லாபமாகும். வியாபாரம் முன்னேற்றமடையும்.ரோகிணி: மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சிரமம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.மிருகசீரிடம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.கூட வேலை பார்ப்பவர்களால் நன்மை அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.திருவாதிரை: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை ஒன்று உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைபடும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலுடன் செயலில் நன்மை காண்பீர்.பூசம்: நன்றாக பழகியவர்களுடனும் கருத்து வேறுபாடு உண்டாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும்.ஆயில்யம்: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். நண்பர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்ட செயல்களை இன்று தள்ளி வைப்பீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.பூரம்: உடலில் இருந்த சங்கடம் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்திற்குரிய முயற்சி வெற்றியாகும்.உத்திரம் 1: வெளி வட்டாரத்தில் உங்கள் ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கும். வழக்கு வெற்றியாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்லுவர்.

கன்னி

உத்திரம் 2,3,4: உயர்ந்த இடத்தில் இருப்பவரை சந்திப்பீர். உங்கள் முயற்சி லாபமாகும் நாள்.அஸ்தம்: செய்துவரும் தொழிலில் சிரமம் உண்டாகும். முயற்சியில் இழுபறி ஏற்படும். நிதானமாக செயல்படும் நாள்.சித்திரை 1,2: புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும். அரசியலில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். மகிழ்ச்சியான நாள்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். கவனமாக செயல்படுவது நல்லது.விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். முயற்சி வெற்றியாகும். சேமிப்பில் கவனம் செல்லும். யோகமான நாள்.

விருச்சிகம்

விசாகம் 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண நெருக்கடி தீரும்.அனுஷம்: குடும்பத்திற்கு வர வேண்டிய பணம் தாமதமாகும். நன்கு பழகியவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளா மாட்டார்.கேட்டை: வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடிப்பதில் சிரமம் உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். பண வரவில் இருந்த தடை விலகும். நிதிநிலை உயரும். விருப்பம் நிறைவேறும்.உத்திராடம் 1: உங்களிடம் இருந்து தொழில் போட்டியாளர் விலகிச்செல்வர். தொழிலில் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நண்பர்கள் ஆதரவுடன் நேற்றைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.திருவோணம்: தேவையற்ற சிந்தனையால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்களிலும் மாற்றம் உண்டாகும்.அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள்.

கும்பம்

அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.சதயம்: நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலையில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். நன்மையான நாள்.

மீனம்

பூரட்டாதி 4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். யோகமான நாள்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றி மறையும். உங்கள் செயலில் பிறர் குறை கூறும் நாள்ரேவதி: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.