பாரிஸில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள விமான நிலைய ஊழியர்கள்
#Airport
#strike
#Workers
#Olympics
#2024
#Paris
Prasu
8 months ago

விமான நிலைய ஊழியர்கள் வரும் ஜூலை 26 ஆம் திகதி - ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகும் நாளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
பரிஸ் விமானநிலையங்களுக்கான கட்டுப்பாட்டு சபைக்கு (ADP) கீழ் இயங்கும் விமான நிலையங்களில் 11.57% சதவீதமான ஊழியர்களைக் கொண்டுள்ள Force Ouvrière (FO) தொழிற்சங்கமே இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளஊ. போனஸ் தொகையாக 1,000 யூரோக்கள் வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜூலை 26, வெள்ளிக்கிழமை காலை 5 மணிமுதல் மறுநாள் காலை 7 மணி வரைக்கும் இந்த வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.



