புங்குடுதீவு மக்களின் சமையல், சாப்பாடு தொடர்பான ஓர் பதிவு

#Jaffna #Food #Punkudutivu #cultural
Prasu
4 months ago
புங்குடுதீவு மக்களின் சமையல், சாப்பாடு தொடர்பான ஓர் பதிவு

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை விருதோம்பலில் சிறந்தவர்கள் புங்குடுதீவார்தான் அதற்கு காரணமும் உண்டு. 

புங்குடுதீவாரை பொறுத்தவரை சோறுக்கு பிறகுதான் மிச்சம் என்ற கொள்கைப்பிடிப்போடு வாழ்பவர்கள் அதிலும் விதம் விதமாக சமைத்து சாப்பிடுவதில் அவர்களை மிஞ்ச ஆளில்லை.

குறிப்பாக புங்குடுதீவு பெண்கள் நன்றாக சமைப்பார்கள் நன்றாக சாப்பிடுவார்கள் ஒரு கறி ஒரு சொதியோடு அலுவலை முடிக்கும் சமையல் சோம்பேரிகள் இல்லை அவர்கள்.

புங்குடு தீவு ஆண்களை விட பெண்கள் உணவு விடயத்தில் அதிக அக்கறை உடையவர்கள் அவர்களுக்கு சுவையான உணவு வேண்டும் வித விதமாக சமைப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே அதனால் அங்கு விருந்தென்று வந்துவிட்டால் சாப்பாடு களை கட்டும்.

அடுத்ததாக மோசமான விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் என பெயரெடுத்தவர்கள் யாழ்ப்பாணத்தவர். என்ன யாழ்ப்பாணத்தார் முழங்கையை பிடிக்குமாப்போல பிடிக்கிறீங்க என்று நக்கலாக சொல்லும் அளவுக்கு அவர்களின் விருந்தோம்பல் இருக்கும். 

உண்மையை சொல்லப்போனால் இது கஞ்சத்தனமோ அடுத்தவருக்கு சாப்பாடு கொடுக்கக்கூடாது என்ற எண்ணப்பாடோ இல்லை.விருந்துக்கு என்று அழைத்தால் அவர்களின் விருந்தோம்பலில் எக்குறையும் இருக்காது ஆனால் எதேச்சையாக வீடுகளுக்கு சென்றால் நிச்சயம் சோறு கிடைக்காது.

இதன் பின்னால் ஒரு காரணம் உண்டு யாழ்ப்பாணத்தவரை பொறுத்தவரை அவர்கள் சிக்கனமாக வாழ்பவர்கள். அரிசி பருப்பு சீனி தொடக்கம் அத்தனைக்கும் அளவுத்திட்டம் வைத்திருப்பார்கள் அதன் படிதான் வாங்குவார்கள். 

அத்தோடு மூன்று நேரமும் வெவ்வேறு சாப்பாடுதான் சமைப்பார்கள் ஒரு வீட்டில் மூன்றுபேரென்றால் மூன்று சிறிய மீன்கள் தான் வாங்குவார்கள் அதில் தலையை சொதியும் வாலை பொரித்தும் நடுத்துண்டை கறியும் வைப்பார்கள் மூவரும் சாப்பிட்டுவிட்டு மிகுதியை குலைத்து நாய்க்கு வைத்துவிட்டு சட்டி முட்டிகளை கழுவி கவுட்டு விடுவார்கள் அதன் பின் இரவுக்கு வேறு சாப்பாடு.

மேலதிகமாக சமைத்து உணவை வீணாக கொட்டும் பழக்கம் அவர்களிடம் இல்லை அதேபோல சந்தைக்குப்போய் கிலோக்கணக்கில் காய்கறிகளை வாங்கி வந்து வீட்டில் காயவிடுவதும் இல்லை அன்றைய கறிக்கு தேவையானதை அன்றேதான் வாங்குவார்கள் அளவோடு. 

இந்த நிலையில் திடீரென ஒருவர் வீட்டிற்கு சென்றால் அவர்களுக்கு கொடுக்க சாப்பாடு இருக்காது அப்படி இருந்தாலும் அதைக்கொடுத்தால் திரும்ப சமைக்க வேணும் திரும்ப அனைத்தும் வாங்கனும் ஆனால் வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிட்டிங்களா என்று கேட்பது தமிழர் மரபாகிற்றே அதனால் தான் கேட்பது போல கேட்பார்கள் வந்தவர் இல்லை சாப்பிட்டுத்தான் வந்தேன் என்று சொல்லும் விதமாக இந்த சிக்கனம் தான் அவர்களை பல இடம்பெயர்களிலும் காப்பாற்றி சிறப்போடு வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

அத்தோடு யாழ்ப்பாணத்தவரை பொறுத்தவரை உணவை விட ஏனைய விடயங்களுக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் வேள்விக்கிடாய் இறைச்சி வாங்கி மணக்க மணக்க சமைச்சு எதேச்சையாக போன உங்களுக்கு சோறு தருவார்கள் என்று நினைத்தால் சோ சோரி அங்கு சோறு இருக்காது. 

இந்த விடயத்தில் புங்குடுதீவார் அட்சய பாத்திரம் போன்றவர்கள் அங்கு எதற்கு குறைவிருந்தாலும் சோறுக்கு குறைவிருக்காது அதுவும் நாலு கறியோடு. சரி இந்த இரு தரப்பும் தானா விருந்து விடயத்தில் பேசப்படக்கூடியவர்கள் என்றால் இல்லை இன்னொரு தரப்பும் இருக்கிறது அதுதான் வன்னியார்... வன்னியாரின் விருந்தின் சிறப்பே காட்டிறைச்சிதான். 

இந்த மீனும் நண்டும் கோழியும் அங்கு வேலைக்காகாது மான் மறை பன்றி உடும்பு உக்கிளான் என்று ஏகத்துக்கு இறைச்சிவகை இருக்கும் இறைச்சிக்கறிகளும் பொரியலும் பச்சை அரிசி சோறும் அரிசிமா புட்டும் என்று அது வேற ரகமாக இருக்கும்.

மட்டக்களப்பார் பாயோடு ஒட்டவைத்தால் இவர்கள் பாய்போட்டு படுக்க வைப்பார்கள் சாப்பிட்டு களைத்துப்போகும் அளவுக்கு இருக்கும் அவர்களின் சாப்பாடு. 

 சரி வந்ததே வந்தம் வடக்கத்தையாரை பற்றி சொல்லாமல் போனால் நன்றாக இருக்காதே விருந்தோம்பலில் அவர்கள் எப்படி என்றால் தங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லாவிட்டாலும் வந்தவருக்கு வளர்த்த கோழியை அடித்து வாய்க்கு ருசியாக சாப்பாடு கொடுத்துவிட்டு தாம் பட்டினி கிடக்க தெரிந்தவர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!