சிம்ம ராசியினர் நிதானமாக செயல்பட்டு நன்மைக் காண வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
சிம்ம ராசியினர் நிதானமாக செயல்பட்டு நன்மைக் காண வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் ஏற்படும். பரணி: வருமானத்தில் இருந்த தடை விலகும். செயல் வெற்றியாகும். வராமல் இருந்த பணம் வரும். லாபமான நாள். கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். புதிய முதலீடு வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சி இழுபறியாகும். வேலை பளு அதிகரிக்கும். ரோகிணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல் வெற்றியாகும். மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி சாதிப்பீர். பணியாளர் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். திருவாதிரை: பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது. புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும் நாள்.

கடகம்

புனர்பூசம் 4: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் கிடைக்கும். நேற்றைய சங்கடம் விலகும். வரவேண்டிய பணம் வரும். பூசம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். எதிர்ப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும். ஆயில்யம்: சிறு சிறு நெருக்கடிக்கு ஆளாவீர். நினைத்ததை அடைவீர். கவனமுடன் செயல்படுவதால் நன்மை உண்டாகும்.

சிம்மம்:

மகம்: உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். கூட்டுத் தொழிலில் குழப்பம் தோன்றும். நிதானமாக செயல்பட்டு நன்மைக் காண வேண்டிய நாள். பூரம்: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் நேற்றைய எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திரம் 1: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். வருமானத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். முயற்சி ஒன்றை ஒத்தி வைப்பீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடை ஏற்படும்.மற்றவர் செயலில் எச்சரிக்கை அவசியம். அஸ்தம்: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். முயற்சி லாபமாகும். சித்திரை 1,2: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். அலுவலகத்தில் இருந்த பிரச்னை விலகும். முயற்சி லாபமாகும்.

துலாம்

சித்திரை 3,4: நேற்றைய முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சுவாதி: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். கவனமாக செயல்படுவது நல்லது. விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும். நேற்றைய முயற்சி முன்னேற்றம் அடையும்.

விருச்சிகம்

விசாகம் 4: உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும். எதிர்பார்த்த பணம் உண்டாகும். அனுஷம்: நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் சிறு சங்கடம் உண்டாகும். வார்த்தைகளால் பிரச்சினை ஏற்படலாம். கேட்டை: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பொதுவாழ்வில் செல்வாக்கு உயரும்.

தனுசு

மூலம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். குடும்பத்தில் சில பிரச்னை தோன்றும். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும். செயல்களில் கவனம் தேவை. பூராடம்: பொது சேவையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் நிதானமாக செயல்பட நன்மை உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். திருவோணம்: தடைப்பட்டிருந்த வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். செயல் எளிதில் நிறைவேற. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அவிட்டம் 1,2: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். சதயம்: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும். மனம் குழப்பம் அடையும். பூரட்டாதி 1,2,3: அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விழிப்புடன் செயல்படுவீர். எதிர்பார்த்ததை அடைவீர்.

மீனம்

பூரட்டாதி 4: நினைத்ததை நிறைவேற்றி முடிப்பீர். தொழில் முன்னேற்றம் அடையும். லாபம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். உத்தியோகத்தில் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். ரேவதி: உங்கள் முயற்சி லாபமாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணத்தால் நன்மை அதிகரிக்கும்.