மேஷ ராசியினருக்கு அலைச்சல் அதிகரிக்கும் , சங்கடம் நீங்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
மேஷ ராசியினருக்கு அலைச்சல் அதிகரிக்கும் , சங்கடம் நீங்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சி இன்று லாபமாகும். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.பரணி: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் பணியில் வெற்றியுண்டாகும். பொருளாதார நிலை சீராகும். சங்கடம் நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.ரோகிணி: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னை தோன்றும். நிதானம் காப்பதால் நன்மை உண்டாகும். மிருகசீரிடம் 1, 2: தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். வருவாய் அதிகரிக்கும். எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பெரியோர் உதவியுடன் திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர். விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். பொருட்கள் வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனதில் தேவையற்ற சிந்தனை அலைமோதும். கவனமுடன் செயல்படுவது நல்லது.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் முயற்சி இழுபறியாகும். எந்த ஒன்றிலும் முடிவிற்கு வரமுடியாமல் தடுமாற்றம் ஏற்படும். பூசம்: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். லாபம் அதிகரிக்கும். ஆயில்யம்: தொழில் போட்டியாளர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். மனதில் குழப்பம் அதிகரிக்கும் நாள்.

சிம்மம்: 

மகம்: உங்கள் செயல் லாபமாகும். வருமானம் அதிகரிக்கும். பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை.பூரம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு ஏற்படும். முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும்.உத்திரம் 1: வியாபாரத்தில் புதியபாதை தெரியும். முதலீட்டில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். செயல் லாபமாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்படுவது நல்லது.சித்திரை 1,2: ஆரோக்யம் சீராகும். எதிரிகளின் தொல்லை விலகும். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். லாபம் அதிகரிக்கும்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். செலவு கட்டுக்குள் வரும். சேமிப்பு உயரும்.விசாகம் 1,2,3: பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். உறவுகளால் நெருக்கடி ஏற்படும். மனதில் குழப்பம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் சில நெருக்கடி உண்டாகும்.அனுஷம்: அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தனுசு

மூலம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். தேவை நிறைவேறும்.பூராடம்: செயலில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். போட்டியாளர் கை ஓங்கும்.உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வருமானம் உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்தது நிறைவேறும். திருவோணம்: வியாபாரத்தில் நெருக்கடி உண்டாகும். வருவாயில் தடை ஏற்படும். புதிய முயற்சி இன்று வேண்டாம். அவிட்டம் 1,2: வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணத்தேவை நிறைவேறும். முயற்சியில் இருந்த தடை விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: முயற்சிக்கேற்ற பலனை அடைவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். செயல் லாபமாகும்.சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கையில் பணம் புரளும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.பூரட்டாதி 1,2,3: மனதில் ஒருவித குழப்பம் இருக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். நிதானமாக செயல்படுவது நல்லது.

மீனம்

பூரட்டாதி 4: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சி இழுபறியாகும். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரேவதி: உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டாகும். பணவரவில் தடைகளை சந்திப்பீர். அவசர வேலைகளால் சங்கடப்படும் நாள்.