மீன ராசியினருக்கு தெய்வ வழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
மீன ராசியினருக்கு தெய்வ வழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சி இன்று லாபமாகும். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.பரணி: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் பணியில் வெற்றியுண்டாகும். பொருளாதார நிலை சீராகும். சங்கடம் நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறி உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது.ரோகிணி: திட்டமிட்டிருந்த செயலை செய்து முடிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் சோர்வு உண்டாகும். உறவுகளால் சங்கடம் தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வரவில் தாமதம் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும்.திருவாதிரை: மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பெரியோர் ஆதரவால் வேலை எளிதாக முடியும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.பூசம்: உங்கள் வேலைகளில் எதிர்பாராத தடை ஏற்படும். உறவினருடன் மனஸ்தாபம் உண்டாகும். நிதானமுடன் செயல்படுவது நல்லது.ஆயில்யம்: வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். குலதெய்வ வழிபாட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. ஒவ்வொன்றையும் யோசித்து செயல்படவும்.பூரம்: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் லாபம் தரும்.உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும்.மற்றவரால் சங்கடப்படுவீர்கள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை.

கன்னி

உத்திரம் 2,3,4: நிதானித்து செயல்படுவதால் வேலை எதிர்பார்த்தபடி நடக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் செயல் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: வேலையில் கவனம் சிதறும். உடன் பணிபுரிபவர்களால் சில சங்கடம் தோன்றும். கவனமுடன் செயல்படுவது நல்லது.

துலாம்

சித்திரை 3,4: நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். லாபம் அதிகரிக்கும்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். செலவு கட்டுக்குள் வரும். சேமிப்பு உயரும்.விசாகம் 1,2,3: பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். உறவுகளால் நெருக்கடி ஏற்படும். மனதில் குழப்பம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் சில நெருக்கடி உண்டாகும்.அனுஷம்: அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தனுசு

மூலம்: உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக உழைப்பீர். குலதெய்வ வழிப்பாட்டில் மனம் செல்லும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். வரவேண்டிய பணம் வரும்.உத்திராடம் 1: திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பதில் தடை தோன்றும். குடும்பத்தில் சிறு பிரச்னை தோன்றி மறையும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: துணிச்சலுடன் செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். திருவோணம்: திறமை பளிச்சிடும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: உங்கள் வேலையில் திருப்பம் ஏற்படும். போட்டி அதிகரிக்கும். பணியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் தடை தோன்றும். முயற்சி இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும்.சதயம்: சுறு சுறுப்புடன் செயல்படுவீர். திட்டமிட்டிருந்த வேலை திட்டமிட்டபடி நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.

மீனம்

பூரட்டாதி 4: மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும். தெய்வ வழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்திரட்டாதி: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். கடந்தகால பிரச்னை ஒன்று மீண்டும் தலை எடுக்கும். அமைதி காப்பது நல்லது.ரேவதி: உங்கள் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!