உலக சாதனை படைத்த 21 வயது தென்கொரியா வீராங்கனை
2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தை தகுதிச் சுற்று போட்டிகள், பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது.
இதில் பெண்கள் தனிநபர் தரவரிசை சுற்றில், தென் கொரியாவின் லிம் சிஹியோன், தகுதிச்சுற்று போட்டியில் 694 புள்ளிகளை பதிவு செய்தார்.
21 வயதான அவர், சிறந்த ஸ்கோரை பதிவு செய்து, ஒலிம்பிக் விளையாட்டின் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இவர் தனிநபர் பிரிவில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நபர் என ஏற்கனவே கணிக்கப்பட்டது.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டில், அதே தென் கொரியாவைச் சேர்ந்த சேயோங் காங்கை, தனிநபர் தகுதிச் சுற்று போட்டியில் 692 புள்ளிகளை சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது.
அதனை, ஒலிம்பிக்கில் தான் களம் கண்ட முதல் போட்டியிலேயே லிம் சிஹியோன் முறியடித்துள்ளார்.
ஆசியப் விளையாட்டு போட்டிகளில் பல ஆண்டுகளாக கொரியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு மற்றொரு சான்றாக வந்திருப்பவர் லிம் சிஹியோன்.