உக்ரைனின் கீவ் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு முதல் முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் கீவ் நகருக்குச் செல்லவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த நாளில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லுமாறும் அழைப்பு விடுத்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் ஜி7 மாநாட்டையொட்டி, இந்தியப் பிரதமருக்கும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையே ஒரு மாதத்துக்கு முன்பு சந்திப்பு நடந்தது.
போரின் தொடக்கத்தில் இருந்து, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று இந்தியா கூறியதுடன், எந்த அமைதி முயற்சிக்கும் இந்தியா பங்களிக்க தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.