இலங்கைக்கு எதிராக 213 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி

#India #SriLanka #kandy #T20 #Cricket
Prasu
1 year ago
இலங்கைக்கு எதிராக 213 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இடம்பெற்று வருகிறது.

கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் Suryakumar Yadav அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றதுடன், Rishabh Pant 49 ஓட்டங்களை பெற்றார். 

 பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Matheesha Pathirana 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன்படி இலங்கை அணிக்கு 214 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4