முல்லைத்தீவு சந்தை கடைத்தொகுதியில் தீ விபத்து!

#SriLanka #Mullaitivu #fire
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு சந்தை கடைத்தொகுதியில் தீ விபத்து!

முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டடத்தில் அமைந்துள்ள கடைத் தொகுதிகளில் மூன்று கடைகளில் தீ பரவி பாரிய சொத்தழிவு ஏற்பட்டுள்ளது.

 லிங்கம் பல்பொருள் வாணிபம், அன்ரன் பல்பொருள் வாணிபம் ஆகிய இரு வணிக நிலையங்கள் மற்றும் களஞ்சியம் ஒன்றும் இன்று அதிகாலை தீ பிடித்து எரிந்து சேதடைந்துள்ளன. இரண்டு கடைகள் மற்றும் களங்சியம் ஒன்றும் இந்த தீ விபத்தின் போது சேதமடைந்துள்ளன. 

இரண்டு கடைகளும் முற்றாக எரிந்துள்ளதுடன் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளன. இன்று (30)அதிகாலை வேளை இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இந்த தீ விபத்து மின்சார கசிவினால் ஏற்பட்டிருக்ககூடுமென நம்பப்படுகிறது. இத்தீவிபத்தினை காவலாளிகள் மற்றும் அதில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் விழிப்படைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள். 

 இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பிரதேச சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

 முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக் காலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு தீ விபத்தினை கட்டுப்படுத்தும் தீயணைப்பு பிரிவு இல்லாத நிலை தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4