18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!

18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமையால், பதுவஸ்நுவர, கிரிமதிய கெலினாவல பிரதேசத்தில் நேற்று (31.07) பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

கணவனால் தாக்கப்பட்டே யுவதி உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகநபரின் கணவரை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். 

கிரிமதி கெலின பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய செனுரி பிரேமதிலக சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். செனுரியின் உறவினர்கள் கணவரின் தாக்குதலே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.  

இதனடிப்படையில், மரணத்தில் சந்தேகிக்கப்படும் செனுரியின் கணவரை கைது செய்யுமாறு பொலிஸாரை வலியுறுத்தி, செனுரியின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இன்று பிற்பகல் கிரிமதியாவ உனலிய வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

மேலும், சடலத்தை சாலைக்கு எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். செனுரியின் கணவரின் தந்தை செனுரியின் தாயை தாக்கியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

பாதிக்கப்பட்ட பெண் கட்டுபொட பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும், புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தி செனுரியின் கணவர் தாக்கியதாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4