பெயர் எண் கூட்டுத்தொகை 36 இன் பலன்கள்
குரு என்ற 3 ம் எண்ணும் - சுக்ரன் என்ற 6 ம் இணைந்து நீச செவ்வாயின் ஆதிக்கத்தை கடக ராசியில் உணர்த்தும் எண்ணாக இந்த 36 ம் எண் விளங்குகிறது.
0 செங்கோல்கள் என எகிப்திய பிரமிடுகளிலும் - உயர்ந்த பதவி என்று சாஸ்திரங்களிலும் - ஸர்வ வியாதி நிவாரணம் எனவும் மந்திர நூல்களிலும் இந்த 36 ம் எண் பற்றி கூறப்பட்டுள்ளது.
அறிவின் சிகரமாக இந்த எண் போற்றபடுகிறது . உயர்ந்த பதவி - அரசாங்க ஆதரவு - சாமானிய மனிதரையும் பிரபலமானவராகவும் - செல்வ சீமானாகவும் உருவாக்கும் சக்தி இந்த 36 ம் எண்ணிற்கு உண்டு.
தான் பிறந்த இடத்திலிருந்து தூரமான இடங்களுக்கு சென்ற பிறகுதான் இவர்கள் புகழையும், அந்தஸ்தையும், செல்வதையும் அடைவார்கள். அனேக பிரயாணங்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருக்கும் . உயர் பதவிகளும் உண்டு .
ஆனால் பிறந்த தேதி - 2- 11 - 20 - 29 - 7 - 16 - 25 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 2- 7 - க வருபவர்களுக்கும் பெண்களால் தொல்லைகளும் குடும்ப வாழ்வில் சிக்கல்களும் விசுவாசமிள்ளதவர்களால் இடையூறுகளும் ஏற்பட்டு விடும் .
மேலும் இந்த 36 எண் கடக ராசியில் வரும் செவ்வாயின் நீச்ச எண் என்பதால் உடன் பிறப்பு வகையிலும் ராணுவம், போலீஸ் துறைகளிலும், வீடு மனை, ரியல் எஸ்டேட் தொழில் வகைகளிலும், ஒரு சில சங்கடங்களை தரும் என்பதால் பிறந்த தேதிக்கு ஏற்றார் போல் இந்த 36 ம் எண்ணை கவனமுடன் கையாளவேண்டும் .