தொடர் மழை : மகாவலி ஆற்றின் அருகில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #weather #Flood #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
தொடர் மழை : மகாவலி ஆற்றின் அருகில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

நேற்றிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் மகாவலி ஆற்றின் ஓரத்தில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது. 

 கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் எதிர்பார்க்கப்படுகிறது. 

 மட்டக்களப்பு-பொலன்னறுவை சாலை கல்லெல்ல பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.  அதே போல் சோமாவதிய ரஜ மகா விகாரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான அணுகல் சாலையும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. 

முன்னெச்சரிக்கையாக, சோமாவதிய ரஜ மகா விகாரைக்குச் செல்லத் திட்டமிடும் பக்தர்கள் அடுத்த சில நாட்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!