கனடா-ரொறன்ரோவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல்
#CANADA
#Attack
#Knife
#Toronto
Prasu
2 years ago
ரொறன்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ரொறன்ரோவின் வோட்டர்ஸ்பொரன்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.