ஜனாதிபதி தேர்தல் : 17 வேட்பாளர்கள் வைப்புத் தொகையை செலுத்தினர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி தேர்தல் : 17 வேட்பாளர்கள் வைப்புத் தொகையை செலுத்தினர்!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இதுவரை தமது பாதுகாப்பு வைப்புத் தொகையை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லை செளரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரதன தேரர் ஆகியோர் பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.  

இதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (05.08) பிற்பகல் சுயேட்சை வேட்பாளராக பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்தினார்.  

ஐக்கிய சுதந்திர தொழிற்சங்க மத்திய நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சிறிபால அமரசிங்கவும் சுயேட்சை வேட்பாளராக இன்று பிணை வைப்புத் தொகையை செலுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4