ரணிலை ஏன் சந்தித்தேன்: அனந்தி வெளியிட்டுள்ள தகவல்

#SriLanka #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
ரணிலை ஏன் சந்தித்தேன்: அனந்தி வெளியிட்டுள்ள தகவல்

தாம் ஜனாதிபதியுடன் பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

 அவரது இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ற வகையில் கடந்த மாதம் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருந்தேன். வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் கேட்டுக் கொண்டேன். 

அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் நான் சந்தித்திருந்தேன். நான் ஏற்கனவே வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்திருக்கிறேன். தற்பொழுது ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தினுடைய செயலாளர் நாயகமாகவும் பணியாற்றுகின்றேன். 

ஒரு மரியாதையின் நிமித்தமே நான் ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்கின்றேன். இந்த சந்திப்பானது இரகசியம் அல்ல.பரகசியமான சந்திப்பு தான். அந்த வகையில் நான், தொடர்ந்தும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கு அழைப்பு விடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களையும் சந்தித்து அவர்களுடைய நிலைப்பாடுகள் என்ன என்பதை அறிந்து மக்களுக்கு சொல்வதில் நான் தயாராக இருக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4