வங்கதேசம் வன்முறை - ஐ.நா தலைமையில் விசாரணைக்கு அழைப்பு விடுத்த இங்கிலாந்து

#Protest #UN #Bangladesh #England #inquiry
Prasu
3 months ago
வங்கதேசம் வன்முறை - ஐ.நா தலைமையில் விசாரணைக்கு அழைப்பு விடுத்த இங்கிலாந்து

வங்காளதேசம் நாட்டில் வேலைவாய்ப்பில் தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். 

இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்த பிறகு, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதனால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார். இதற்கிடையே இங்கிலாந்திடம் ஷேக் ஹசீனா அடைக்கலம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வங்காளதேசம் நிலவி வரும் வன்முறை தொடர்பாக ஐ.நா. தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் "இதுவரை இல்லாத வன்முறை மற்றும் உயிரழப்புகள் வங்காளதேசத்தில் இரண்டு வாரங்களில் நடைபெற்றுள்ளன. 

ராணுவத் தளபதியால் ஒரு இடைக்கால அரசு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தை நோக்கிய நடவடிக்கையை பார்க்க நாங்கள் விரும்புகிறோம்.

வன்முறைறை முடிவுக்கு கொண்டு வர, மீண்டும் அமைதி திரும்ப, மேலும் உயிரிழப்பை தவிர்க்க அனைத்து தரப்பிலும் இருந்து ஒன்றிணைந்து பணியாற்றுவது அவசியம். இங்கிலாந்து- வங்காளதேசம் மக்களிடையே ஆழமான தொடர்பு உள்ளது. காமன்வெல்த் மதிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!