இங்கிலாந்து வன்முறை முழு ஐரோப்பாவும் பரவும் அபாயம்!
உலகளவில் உயிர்கொல்லியான மத வன்முறை தற்பொழுது பரந்தளவில் பரவி வருகின்றது. வெவ்வேறு மதத்தவரும் தங்கள் மதங்களுக்கு எதிரானவர்கள் மீது வன்முறைகளை காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் வன்முறை தீவிரமடைந்து வருகின்றது.
அந்தவகையில் அண்மையில் இங்கிலாந்தில் மிக மோசமான இனவெறிக்கு எதிரான மத கலவரம் இங்கிலாந்து முழுவதும் பரவியுள்ளது. சவுத்போர்ட்டில் தொடங்கிய கலவரம் லிவர்பூல், லண்டன், மிடில்ஸ்பரோ போன்ற முக்கிய நகரங்களுக்கும் பரவி தற்போது அரசின் கட்டுப்பாட்டை மீறி இன மோதலாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஜூலை 29 அன்று இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் ‘டெய்லர் ஸ்விஃப்ட் யோகா மற்றும் நடனப் பட்டறையில்’ கலந்துகொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். பிரித்தானியாவில் புகலிடம் கோரி வந்த 17 வயது முஸ்லீம் சிறுவன், சிறுமிகளை கத்தியால் குத்தி கொன்றதாக வதந்தி பரவியது.
இதன் காரணமாக காலப்போக்கில் இந்த வன்முறை பெரியளவில் வெடித்து சிதறும் என எச்சரிக்கப்பட்டு . பிரித்தானிய சமூகத்தில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இத்தாலி உள்ளட்ட பல நாடுகள் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த வன்முறையானது பிரித்தானியாவை தாண்டி ஐரோப்பா முழுவதும் வெடிக்கும் அச்சம் காணப்படுவதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மன் சுவிஸர்லாந்து போன்ற நாடுகளில் இந்த வன்முறை வெடிக்கலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில் தற்பொழுது பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருவதால் இந்த வன்முறை அங்கு வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. எனினும் பிரான்ஸ் நாட்டில் தற்பொழுது அதிகளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த வன்முறைச் சம்பவங்களினால் அப்பாவிப் பொது மக்களே கொல்லப்படுகின்றனர்.