மகர ராசியினர் இறையருளால் நன்மை அடையும் நாள் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: இன்று உங்களுக்கு யோகமான நாள். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: நன்மையான நாள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.கார்த்திகை 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளுவின் காரணமாக மனம் சோர்வடையும்.ரோகிணி: மகிழ்ச்சியான நாள். வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.மிருகசீரிடம் 1,2: தடைகளைத்தாண்டி வெற்றியடையும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணத்தேவை அதிகரிக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: நெருக்கடியான நாள். அரசுவழி முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர். உடன் பணிபுரிபவரால் நெருக்கடிக்கு ஆளாவீர். மனக்குழப்பம் அதிகரிக்கும்.திருவாதிரை: செல்வாக்கு உயரும் நாள். தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். புனர்பூசம் 1,2,3: எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.
கடகம்:
புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவார்.பூசம்: மனம் மகிழும் நாள். குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர். வரவை வைத்து கடன்களை அடைப்பீர். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.ஆயில்யம்: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். நம்பிக்கையுடன் எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். நண்பர்கள் உதவியால் முயற்சி நிறைவேறும்.
சிம்மம்:
மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். மனதில் தெளிவு ஏற்படும். தடைப்பட்ட முயற்சி வெற்றியாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்தை சாதிப்பீர்.பூரம்: லாபமான நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.உத்திரம் 1: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் சில தடை தோன்றும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். செயல்களில் குழப்பம் உண்டாகும்.அஸ்தம்: நன்மையான நாள். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.சித்திரை 1,2: முயற்சிகளில் சில நெருக்கடிகளை சந்திப்பீர். எதிர்பாராத செயல் சங்கடம் குழப்பத்தை உண்டாக்கும்.
துலாம்:
சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.சுவாதி: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். செயல் லாபமாகும். வேலைக்காக காத்திருந்தவருக்கு தகவல் வரும்.விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். விரய சந்திரனால் செயல்களில் சிரமம் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசரச் செயல் இன்று எதிர்மறையான பலன்களை உண்டாக்கும். யோசித்துச் செயல்படுவது நல்லது.அனுஷம்: யோகமான நாள். தொழிலில் இருந்த சங்கடம் நீங்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்டை: உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் மனம் சோர்வடைவீர்.
தனுசு:
மூலம்: நன்மையான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர் . வெளியி்ல் உங்கள் மதிப்பு உயரும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: லாபமான நாள். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உத்திராடம் 1: குடும்பத்தில் சில பிரச்னை தோன்றி மறையும். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடைகளை சந்திப்பீர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: இறையருளால் நன்மை அடையும் நாள். உங்கள் செயலில் சங்கடங்களை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் காணமுடியாது.திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: தடைகளை சந்திக்கும் நாள். உங்கள் விருப்பத்திற்கு மாறாக இன்று நீங்கள் சந்திக்க வேண்டிவரும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.சதயம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரட்டாதி 1,2,3: வரவு செலவில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டாலும் முயற்சி நிறைவேறாமல் போகும்.
மீனம்:
பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். கடுமையாக உழைத்தாலும் செயலில் நீங்கள் எதிர்பார்த்த அனுகூலத்தை அடைய முடியாது.உத்திரட்டாதி: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். உடல்நிலை சீராகும். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும்.ரேவதி: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். தேவையற்ற பிரச்னை தேடிவரும். ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம்.