சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்த ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
2024ஆம் ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் நிகர எண்ணிக்கை 6,237 குறைந்து, 40,963 ஆக ஆகியுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலகட்டத்தில் 80,684 பேர் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து நிரந்தர வெளிநாட்டுக் குடியிருப்பாளர்களாக குடியமர்ந்துள்ளார்கள்.
இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 5.9 சதவிகிதம் குறைவாகும்.