ஜபோர்ஜியா அணுமின் நிலையத்திற்கு தீவைத்த படையினர் : அதிகரிக்கும் போர் பதற்றம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ரஷிய ராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையதிற்கு ரஷ்ய வீரர்கள் தீவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கரும்புகை எழுந்து அணுவீச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டது. இவ்வாறான தாக்குதலை ரஷியா தவிர்க்க வேண்டும் என உக்ரைன் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் ரஷியா-உக்ரைன் போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.