ரஷ்யா-பெல்கோரோட் பிராந்தியத்தில் அவசரநிலை பிரகடனம்
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்த போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. வீரர்கள் நேருக்குநேர் மோதாமல் டிரோன், ராக்கெட் மூலம் கட்டமைப்புகளை குறிவைத்து இருநாடுகளும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில்தான் கடந்த வாரம் திடீரென 10 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தது ரஷியாவுக்கு தெரியவந்தது.
இதனால் அப்பிராந்தியத்தில் அவசரநிலை பிறப்பித்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றியதுடன், எல்லையில் இருந்து உக்ரைன் வீரர்களை வெளியெற்ற ரஷியா ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மற்றொரு எல்லை பிராந்தியமான பெல்கோரோட் பிராந்தியத்திலும் ரஷியா அவசரநிலை பிறப்பித்துள்ளது.
உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். இங்குள்ள 5 ஆயிரம் குழந்தைகளை பாதுகாப்பான பகுதியில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு மோசமான நிலை உருவாகியுள்ளது. வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். உள்ளூர் மக்கள் கவலை அடைந்துள்ளனர். 11 ஆயிரம் மக்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஆயிரம் பேர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என பெல்கோரோட் கவர்னர் வியாசெஸ்லாவ் கினாட்கோவ் தெரிவித்துள்ளார்.