சுவிட்சர்லாந்தில் இணையத்தில் பரப்பப்படும் போலி விளம்பரங்கள் - மக்களே அவதானம்!
சுவிற்சர்லாந்தில் இப்பொழுது இணையதளங்களில் பிரபல நிறுவனங்கள் குறித்தும் அதிகமாக மக்கள் தேடுபவை குறித்தும் போலி விளம்பரங்கள் பரவிவருகிறது.
இப்போலி விளம்பரங்கள் முகநூலில் பரவி வருகின்றன.மேலும் இது முகநூல் சட்டத்திற்கு மீறியதா என தெரியவில்லை,இருந்தாலும் இது போலியான விளம்பரம் என தெரிவிக்கின்றோம்.
இவ்வாறான விளம்பரங்கள் லிங்குகள் மூலம் முகநூல்களில் பரவிவருகிறது. அவ்வாறு காணப்படும் லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் அத்தொலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களும் மோசடியாளர்கள் கைப்பற்றுவார்கள்.
உதாரணமாக, தற்போது உலகளாவிய ரீதியில் அனைத்து மக்களும் தமது ஆவணங்கள் , வங்கி கணக்கு இலக்கங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை தொலைபேசியில் வைத்துக்கொள்கிறார்கள்.
ஆகவே இத்தகைய போலி விளம்பரங்களை க்ளிக் செய்யும் பொது அவர்களது தரவுகள் திருடப்படுகிறது.
ஆகையால் அனைவரும் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு போலியான விளம்பரங்களை அணுகாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.