கும்ப ராசியினருக்கு உள்ளம் மகிழும் நாள் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம் விருத்தியாகும்.பரணி: வரலட்சுமியை வழிபட்டு வளம் காண வேண்டிய நாள். செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவதும், வியாபாரத்தில் அக்கறை கொள்வதும் நல்லது.கார்த்திகை 1: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெரியோர் ஆதரவால் வேலை நடந்தேறும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். கவனமாக செயல்படுவீர். முயற்சி நிறைவேறும் நாள்.ரோகிணி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் நெருக்கடி ஏற்படும். வரவில் இழுபறி உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் வேலை எளிதாக நிறைவேறும். வருமானத்தில் இருந்த தடை விலகும். கோயில் வழிபாட்டால் மனம் தெளிவாகும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் வேலை நிறைவேறும்.திருவாதிரை: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு தோன்றும். சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்.புனர்பூசம் 1,2,3: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடங்களை சரிசெய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். குடும்ப நெருக்கடி விலகும்.
கடகம்:
புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்.பூசம்: பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். உறவுகளால் சங்கடம் தோன்றும். திட்டமிட்ட வேலை தள்ளிப்போகும்.ஆயில்யம்: வழக்கு வெற்றியாகும் நாள். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். எதிர்பார்த்த வரவை அடைவீர்.
சிம்மம்:
மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். குடும்பத்திற்காக மற்றவேலைகளை ஒதுக்கி வைப்பீர். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். பூரம்: அமைதி காக்க வேண்டிய நாள். கோயில் வழிபாட்டில் கோரிக்கை நிறைவேறும். பூர்வீக சொத்து குறித்த பிரச்னை முடிவு வரும்.உத்திரம் 1: குலதெய்வ அருள் உண்டாகும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்படும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். உறவினரால் லாபம் உண்டாகும்.அஸ்தம்: உழைப்பிற்கேற்ற வருவாய் வரும். செயல்களில் தடைகளை சந்திக்க வாய்ப்பிருப்பதால் அமைதி காப்பது நல்லது.சித்திரை 1,2: ஆதாயமான நாள். விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்:
சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தின் உதவியுடன் நினைத்ததை அடைவீர்.சுவாதி: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். பழைய பிரச்னை இன்று மீண்டும் உருவெடுக்கும்.விசாகம் 1,2,3: யோகமான நாள். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்:
விசாகம் 4: எண்ணம் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த வரவு வரும். நிதிநிலை உயரும். புதிய பொருட்கள் வாங்குவீர்.அனுஷம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் வார்த்தைகளால் விரோதம் உண்டாகும்.கேட்டை: ஆதாயம் காணும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும். கொடுத்து வைத்த பணம் வரும். குடும்பத்தில் நெருக்கடி குறையும்.
தனுசு:
மூலம்: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். உங்கள் செயல் லாபமாகும். நினைத்தது நிறைவேறும். மனக்குழப்பம் விலகும்.பூராடம்: வழிபாட்டில் ஏற்றம் காணும் நாள். மனக்குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். உத்திராடம் 1: நெருக்கடி நீங்கும் நாள். நேற்றைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். செல்வாக்கு உயரும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.திருவோணம்: பண விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். செல்வாக்கை வெளிக்காட்ட செலவு செய்யாதீர்.அவிட்டம் 1,2: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: உள்ளம் மகிழும் நாள். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.சதயம்: நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.பூரட்டாதி 1,2,3: செயல்கள் சாதகமாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.
மீனம்:
பூரட்டாதி 4: தெய்வீக சிந்தனையில் மனம் மூழ்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். பணவரவு திருப்தி தரும்.உத்திரட்டாதி: அமைதி காக்க வேண்டிய நாள். மறைமுக எதிரிகளால் பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். மனமும் உடலும் சோர்வடையும்.ரேவதி: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.