சமூக ஊடக பதிவால் பிரெஞ்சு ஒலிம்பிக் வீரர் இடைநீக்கம்

#France #Player #Olympics
Prasu
3 months ago
சமூக ஊடக பதிவால் பிரெஞ்சு ஒலிம்பிக் வீரர் இடைநீக்கம்

இஸ்ரேல் விரோத பதிவுகளுக்காக பிரான்ஸ் ஒலிம்பிக் வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸை சேர்ந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் முகமது அப்துல்லா கவுன்டாவை (Muhammad Abdallah Kounta) பிரெஞ்சு தடகள கூட்டமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது.

அவரது பழைய சமூக ஊடக பதிவுகள் ஆன்லைனில் மீண்டும் வெளிவந்ததை அடுத்து அவர் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் இஸ்ரேலை எதிர்த்து சில கடுமையான கருத்துகளை பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, பிரான்ஸ் தடகள கூட்டமைப்பு (France Athletics Federation) அவரை உடனடியாக இடைநீக்கம் செய்தது.

இதனால் அவர் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என சொல்லப்படுகிறது. 2021 மற்றும் 2024க்கு இடையில் கவுண்டா வெளியிட்ட சில பழைய ட்வீட்களை ஒரு எக்ஸ் கணக்கு தோண்டி எடுத்துள்ளது.

அவற்றில் கவுண்டா, பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குரல் கொடுத்துள்ளார். 

மேலும், இஸ்ரேல் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது ஆன்லைனில் நிறைய பின்னடைவுக்கு வழிவகுத்தது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தூண்டியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!