தெய்வத்தின் கோபத்தால் வழங்கப்பட்ட சாபம் : இருளில் மூழ்கிய நகரம்!
புராண கதைகளின்படி அட்லாண்டிக் கடற்பரப்பில் பிரமாண்டமான நகரம் ஒன்று மூழ்கி கிடப்பதாக கூறப்படுகிறது.
கதைகளின் படி தெய்வத்தின் கோபத்தால் வழங்கப்பட்ட ஒரு சாபம் இந்த நகரம் மூழ்கியமைக்கு காரணமாக கூறப்படுகிறது.
இது முதன் முதலாக கிமு 360 இல் சின்னமான தத்துவஞானி பிளாட்டோவால் எழுதப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இதனை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் அந்த கதையில் ஓர் அடிப்படை இருக்கலாம் என நம்புகிறார்கள்.
கேனரி தீவுகளுக்கு அருகில் நீரில் மூழ்கிய தீவுகளின் தொகுப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பண்டைய மூழ்கிய ராஜ்யக் கதைகளின் உண்மையான ஆதாரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதனை ஆய்வு செய்வதற்காக 2500 மீட்டர் ஆழத்திற்குள் செல்லக்கூடிய நீர்மூழ்கி கப்பலில் அதி திறன் வாய்ந்த கெமராக்களையும், ரேடாவையும் பொருத்தி அனுப்பிவைத்துள்ளனர். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த தீவுகள் படுகுழியில் மூழ்கியதாகக் கருதப்படும் கடல் தளத்திலிருந்து இந்த கப்பல் ஆய்வுகளை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சில மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயினின் புவியியல் ஆய்வைச் சேர்ந்த கடல் புவியியலாளர் லூயிஸ் சோமோசா வெளியிட்ட கருத்தில், இது அட்லாண்டிஸ் புராணத்தின் தோற்றமாக இருக்கலாம்.
அவை கடந்த காலத்தில் தீவுகளாக இருந்தன, தற்போது மூழ்கிவிட்டன எனத்தெரிவித்துள்ளார்.
எழும் அலைகள் காரணமாக இப்பகுதி நீரில் மூழ்கி, இறுதியில் அலைகளுக்கு அடியில் புதைக்கப்பட்டது, இது திமோருக்கு எதிராக புதிய கடற்கரைகள் உருவாக வழிவகுத்தாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.