வைத்தியசாலை மருந்துகளால் கண்பார்வை இழந்த மூவரால் வழக்கு தாக்கல்

#SriLanka #Eye #Medicine #HighCourt
Prasu
3 months ago
வைத்தியசாலை மருந்துகளால் கண்பார்வை இழந்த மூவரால் வழக்கு தாக்கல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக (Keheliya Rambukwella) கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றத்தில் மூவரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கண்புரை சத்திர சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலை ஒன்றில் வழங்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதன் காரணமாக கண்பார்வை இழந்துள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கந்தபொல பிரதேசத்தை சேர்ந்த இராஜரத்தினம் என்பவர் உள்ளிட்ட மூவரினாலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தாம் சிகிச்சை பெற்ற காலப்பகுதியில் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு தலா 10 கோடி ரூபாவை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு புதிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!