சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது மோசடி குற்றச்சாட்டு

#Prince #saudi #Fraud
Prasu
3 months ago
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது மோசடி குற்றச்சாட்டு

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது முன்னாள் அதிகாரி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரைத் தொடங்கும் அரச ஆணையில் தனது தந்தையும் அரசருமான அப்துலஜீசையின் கையொப்பத்தை போலியாக இட்டதாக முன்னாள் மேஜர் ஜெனரலும் உளவுத்துறை அதிகாரியுமான அல்-ஜப்ரி தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள அவர் இது தொடர்பாக கூறியதாவது:- ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த 2015-ம் ஆண்டு போா் பிரகடனம் செய்தது. தாக்குதல் நடத்துவதற்கான அரச உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவை அரசரை போல் போலியாக கையொப்பமிட்டு இளவரசா் முகமது பின் சல்மான் பிறப்பித்திருந்தாா். அரச ஆணையில் தனது தந்தையின் கையொப்பத்தை போலியாக இட்டார்.

வயது மூப்பு காரணமாக அரசரின் மூளைத் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அதை பயன்படுத்தி இளவரசா் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் மீது போா் தொடுத்தாா். 

இளவரசர் முகமது தனது தந்தைக்குப் பதிலாக போரை அறிவிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார். அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். எனது இரண்டு குழந்தைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறேன். எனவே எனது குழந்தைகள் மற்றும் எனது நாட்டின் நலனுக்காக பேசுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. 

என்னை கொல்ல இளவரசர் விரும்புகிறார். என் கொலைக்கு அவர் திட்டமிட்டார். நான் இறந்து கிடக்கும் வரை அவர் ஓயமாட்டார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார். முன்னாள் அதிகாரியின் இந்த குற்றச்சாட்டுக்கு சவுதி அரேபியா கருத்து தெரிவிக்கவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!