கமலா ஹாரிஸிற்கு ஆதரவளிக்கும் ஹிலாரி கிளிண்டன்

#Election #America #President
Prasu
3 months ago
கமலா ஹாரிஸிற்கு ஆதரவளிக்கும் ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருக்கிறார்.

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த விழாவின் முடிவில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார்.

ஹிலாரி கிளிண்டன் பேசும்போது கூறியதாவது:- கமலா ஹாரிஸ்க்கு அமெரிக்காவை வழிநடத்திச் செல்லும் குணம், அனுபவம், பார்வை உள்ளது. அவருடைய இதயத்தையும் அவருடைய நேர்மையையும் நான் அறிவேன். 

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் இளம் வழக்கறிஞர்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக தொடங்கினோம். அத்தகைய வேலை உங்களை மாற்றும். 

அந்த குழந்தைகள் உங்களுடன் இருக்கட்டும். தான் பாதுகாத்த ஒவ்வொரு குழந்தை, அவள் உதவிய ஒவ்வொரு குடும்பம், சேவை செய்த ஒவ்வொரு சமூகத்தின் நம்பிக்கைகளையும் கமலா ஹாரிஸ் தன்னுடன் சுமந்து செல்கிறார். எனவே ஜனாதிபதியாக அவர் எப்போதும் எங்களுக்கு துணையாக இருப்பார். 

கடின உழைப்பாளி குடும்பங்களுக்கு செலவுகளை குறைக்க போராடுவார். நல்ல ஊதியம் தரும் வேலைகளுக்கான கதவுகள் திறக்கப்படும். மேலும், அவர் நாடு முழுவதும் கருக்கலைப்பு உரிமைகளை மீட்டெடுப்பார். முன்னேற்றம் சாத்தியம் என்பதே என் வாழ்க்கையின் கதையும் நம் நாட்டின் வரலாறும். 

ஆனால் உத்தரவாதம் இல்லை. அதற்காக நாம் போராட வேண்டும். அதை ஒருபோதும், எப்போதும் கைவிடாதீர்கள். இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.

 2016 ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்து ஹிலாரி போட்டியிட்டார். இதில் ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!