கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலையை பிரதான நகரங்களாக மாற்ற திட்டம் : ரணில்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலையை பிரதான நகரங்களாக மாற்ற திட்டம் : ரணில்!

கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும் காலநிலை மாற்ற பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "எங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கலகெதரவில் இருந்து கட்டுகஸ்டோ வரை மாற்றுமாறு ஜப்பானிடம் நான் குறிப்பாகக் கோரியுள்ளேன். 

அதனை ஒரு பெரிய நகர்ப்புறமாக உள்ளடக்குவோம் என்று நம்புகிறோம். இப்போது கண்டியை பெரிய மையமாகச் செயல்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது. 

வரலாற்றுப் பெறுமதியைப் பாதுகாத்து ஹில்டன் நிறுவனத்துடன் இணைந்து போகம்பர சிறைச்சாலையை ஹோட்டலாக மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பழைய தபால் நிலையத்துடன் தாஜ் ஹோட்டலைக் கட்டுவதற்கு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். போகம்பர பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளாகப் பயன்படுத்தக்கூடிய வேறு சில காணிகள் உள்ளன, அதற்கு கண்டி தெற்கு டிப்போவைப் பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!