ரணில் வெல்வாரா? வென்றால் என்ன செய்வார்? இவருக்கு ஆதரவு செலுத்தலாமா?
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலிற்கான ஆயத்தங்களும் பிரச்சாரங்களும் தொடக்கி சூடுபிடித்துச் செல்கின்றது.
ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சாரங்களையும் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் வெளியிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் லங்கா 4 ஊடகம் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிடுகின்றது.
ஆம் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் அந்தவகையில் இலங்கையில் அடுத்த ஜனாதிபதியாக யார் வருவார் என்ற தீர்ப்பை மக்கள், ஒரு வேட்பாளரை தெரிவு செய்யும் நேரமாகும். எனவேதான் லங்கா4 ஊடகமான நாம் அது தொடர்பாக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலை பற்றி சற்று அலசுவோம்.
முதலில் ரணில் விக்ரமசிங்க. ரணில் வெல்வாரா? வென்றால் என்ன செய்வார்? இவருக்கு ஆதரவு செலுத்தலாமா?
ரணில் விக்ரமசிங்கவை எடுத்துக்கொண்டால் அவர் பழம்பெரும் இலங்கை அரசியல்வாதி. பொதுவாக அவர் கிறிஸ்தவ மத பரம்பரையில் வந்திருந்தாலும் கூட பௌத்தத்தை தழுவி ஒரு பரம்பரையாக ஜே ஆர் இனுடைய பரம்பரையினரோடு இணைந்து தொடர்ந்து வந்திருக்கின்ற ஒரு அரசியல்வாதியாக நாங்கள் கணிக்க கூடியதாக இருக்கிறது.
அவரைப் பொறுத்தவரை படித்தவர், அவர் ஒரு சட்டத்தரணியாக மேற்படிப்பு படித்திருக்கிறார் பல முறை தேர்தலிலே போட்டியிட்டிருக்கின்றார். மற்றும் பல முக்கிய விடயங்களிலேயே போர் நிறுத்தம் போன்ற பல விடயங்களில் தலையை கொடுத்து குனிந்தும் வளைந்தும் நிமிர்ந்தும் தன்னுடைய அரசியலை கொண்டு செல்பவர்.
இளைஞராக இருந்து இலங்கையிலே அதி குறைந்த வயதிலேயே இளைஞராக அரசியலுக்கு வந்த ஒருவர் இதைத் தாண்டி அவருடைய சில விடயங்களை பார்க்கப்போனால் சூழ்ச்சியோ அல்லது அவருடைய தவறோ அல்லது அவர்களோடு இருந்ததனாலும் பல பழிகளை குமந்திருக்கின்றார்.
அது ஒரு புறம் இருக்க கடந்து வந்த பாதையிலே கடைசியாக அவர் ஒரு இடத்தில் கூட வெல்லாத இவருடைய கட்சிக்கு ராஜபக்ஷவினருக்கு எதிரான சர்ச்சை ஆர்ப்பாட்டத்தின் பொழுது ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்ட அந்த அபாயகரமான நிலையிலே ரணில் விக்கிரமசிங்க அவர்களிடத்தில் இந்த பதவியை அதாவது குழைந்து எரிந்து கொண்டிருந்த மற்றும் பட்டினியிலே வாடிக் கொண்டிருந்த இலங்கையை ஒப்படைத்து விட்டு ராஜபக்ச குடும்பத்தினர் சில மாதங்கள் நாட்டை விட்டு வெளியே ஓடினர்.
அந்தக் காலகட்டத்தை மக்கள் ராஜபக்ச ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு இலங்கை என்பதை கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்று கணிப்பது போல ஒரு காலகட்டத்தை கணிக்க கூடிய காலகட்டமாக அது கருதப்பட்டது.
அந்த காலகட்டத்தின் பின்னராக பல நாடுகளிடத்தில் கடன் வாங்கி உதவிகளைப் பெற்று மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவித்து சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்புகளை வழங்கி சுற்றுலாத் துறை மூலமும் உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்ததன் மூலமும் ரணில் விக்கிரமசிங்க படிப்படியாக இதுவரையிலும் தன்னுடைய பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறார் என்று தான் நாங்கள் நினைக்க வேண்டும்.
காரணம் நாங்கள் நடுநிலையாக பொதுவாக கூறுவதாக இருந்தால் இங்கே மிகைப்படுத்தியோ அல்லது தாழ்த்தியோ பேசக்கூடாது அதன் காரணத்தால் மக்கள் அனைவரும் சற்று ஒரு நம்பிக்கை அதாவது முன்பிருந்ததை விட ஒரு மூச்சு விடுகின்ற அளவுக்கு அல்லது ஒரு குடும்பத் தலைவன் தன்னுடைய குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பதற்காக அறாவட்டிக்கு பணம் வாங்கி தன்னுடைய குடும்பத்திற்கு கஞ்சி வார்க்கின்ற வேலையை ரணில் விக்கிரமசிங்க செய்து கொண்டிருக்கிறார். அத்தோடு கூட நாட்டை முன்னேற்றுகின்ற ஒரு சில விடயங்களிலும் ஏற்றுமதி இறக்குமதி போன்ற விடயங்களிலும் அவர் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தநிலையிலேயே தான் இப்பொழுது தேர்தல் வந்திருக்கிறது இந்த தேர்தலிலே தற்பொழுது அடுத்ததாக இருக்கின்ற கட்சிகள் இவர் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் சரி தவறு என்பதை மக்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அது சரியா தவறா என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். ஜதார்த்தமாக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வந்தால் இந்த நாடு மேலும் முன்னேறுமா அல்லது அப்படியே இருக்குமா அல்லது கடனுக்குள் மூழ்குமா அல்லது இதைவிட படிப்படியாக அவர் குறிப்பிட்ட ஆண்டு நெருங்குகின்ற பொழுது முன்னேற்றத்திற்கு வருமா என்பதை அடுத்து இருக்கின்ற சஜித் பிரேமதாசா அவர்கள் முன்வைக்கின்ற திட்டங்கள் மற்றும் நாமல் ராஜபக்ஷ முன்வைக்கும் திட்டங்கள் அனுர முன்வைக்கும் திட்டங்களை வைத்து தான் ரணில்விக்கிரமசிங்க அவர்களை, ஏனையோர் வென்றால் செய்வார்களா?
செய்தால் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் அல்லது வெறும் பேச்சோடு விட்டுவிடுவார்களா என்பதை கடந்த காலத்திலே அவர்கள் ஊடாக பெற்ற அனுபவத்தையும் வைத்து அவர்களுக்கு இப்பொழுது இருக்கின்ற தகமைகள், அவர்கள் சில தவறுகள் செய்திருக்கலாம், அவர்கள் வந்தால் இதைவிட மக்கள் பெருமூச்சு விடக் கூடியவாறு இருக்கும் என்று மக்கள் நினைத்தால் வேறு வாக்காளரை தெரிவு செய்யலாம்.
அல்லது ரணில் விக்ரமசிங்க திருப்தியாக இருக்கும் என நினைத்தால் நீங்கள் ரணில் விக்ரமசிங்கவை கூட தெரிவு செய்யலாம் என்பது லங்கா 4 ஊடகத்தினுடைய கருத்து.