பிரித்தானியாவில் 8 வயது சிறுமி மீது கத்திக்குத்து தாக்குதல்

#Arrest #Attack #England #Knife
Prasu
1 year ago
பிரித்தானியாவில் 8 வயது சிறுமி மீது கத்திக்குத்து தாக்குதல்

பிரித்தானியாவின் டோர்செட் பகுதியில் இளம் சிறுமி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டோர்செட்டின்(Dorset) கிறிஸ்ட்சர்ச் (Christchurch) அமைந்துள்ள முகவரியில் இளம் சிறுமி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வயது சுமார் 8 இருக்கலாம் என்றும் அவர் தற்போது உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் Bournemouth Daily Echo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் Christchurch பகுதியை சேர்ந்த 20 வயது ஆண் மற்றும் 50 வயதுடைய பெண் என இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 தலைமை கண்காணிப்பாளர் Stewart Dipple, நடந்த வன்முறை தொடர்பாக யாருக்கும் தகவல் தெரிந்து இருந்தால் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4