மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி!
மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இன்று (22.08) முதல் அமுலுக்கு வரும் வகையில் மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மக்களுக்கு 25 ரூபா எரிபொருள் மானியம் வழங்கப்பட உள்ளது.
மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா மானியமாக வழங்குவதற்கான யோசனையை கடற்றொழில் அமைச்சர் டிடக்ளஸ் தேவானந்தா நேற்று (21) அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
இந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் நாளை முதல் இந்த மானியம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேயிலை விவசாயிகளுக்கு உர கொடுப்பனவாக 4,000 ரூபாவை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உர கொடுப்பனவை 2,000 ரூபாவிலிருந்து 4,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.