பிரான்ஸ்-சர்ட்ரோவில்லே பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
#Death
#France
#Body
Prasu
7 months ago

Sartrouville (Yvelines) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நிர்வாணமாக சடலம் இருந்த நிலையில், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 14, புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்ற போதும், இது தொடர்பான தகவல்கள் தற்போதே வெளியாகியுள்ளன.
50 வயதுடைய ஒருவரது சடலம் குறித்த கட்டிடத்தின் படிக்கட்டின் கீழே கிடந்ததாகவும், நிர்வாணமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



