பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் உடனடி தடையை விதிக்கவேண்டும்! ஐ.நா வேண்டுகோள்
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தக்கூடாது அவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் உடனடி தடையை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அரசாங்கத்தின் உயர்பதவிகள், பாதுகாப்புதுறை, இராஜதந்திர பதவிகள்,என்பவற்றை வகிக்கும் நபர்கள் மீது மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை மிக்க குற்றச்சாட்டுகள் வெளியானால்,அவர்களை அதிகாரத்திலிருந்து நீக்குதலை முன்னெடுக்கவேண்டும்.
மேலும் அத்தகையவர்களை நியமனம் செய்தலை தவிர்க்கவேண்டும், மேலும் நிலைமாற்றுக்கால நீதியை ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பில் அவ்வாறான நபர்கள் இடம்பெற்றிருந்தால் அவர்களை நீக்கவேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் உடனடி தடையை விதிக்கவேண்டும்,,அதற்கு பதிலாக முன்வைக்கப்படும் சட்டவாக்கம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துடன் பொருந்திச்செல்வதாக காணப்படவேண்டும்.