குற்றக் கும்பலைச் சேர்ந்த 21 பேர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
குற்றக் கும்பலைச் சேர்ந்த 21 பேர் கைது!

கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மேலும் 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

20 விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே இந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் ஜா அல பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 05 கிராம் 200 மில்லிகிராம் போதைப்பொருளுடன் குற்றக் கும்பலுடன் தொடர்புடைய 51 வயதுடைய நபர் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 07 கிராம் 220 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 நீண்ட விசாரணைகளின் போது 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றக் கும்பலுக்கு உதவியவர்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, 2024 மார்ச் 19 முதல் நேற்று (21) வரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 3,373 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4