முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று (22.08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தரமற்ற ஆன்டிபாடி ஊசி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேகநபர் மறுநாள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 அதன்படி, தற்போது வரை முன்னாள் சுகாதார அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4