சுனிதா வில்லியம்ஸ் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

#Space #astronaut
Prasu
3 months ago
சுனிதா வில்லியம்ஸ் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். 

அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். 

ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. 

இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர். இந்த பிரச்சனையால் 50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார். போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் என்பது 210 நாட்கள் வரை விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு விண்கலம் ஆகும். 

பின்பு அது தானாகவே பூமிக்கு திரும்பி தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்வெளியில் சிக்கியுள்ள வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் உள்ள 3 சிக்கல்கள் குறித்து அமெரிக்க இராணுவ விண்வெளி அமைப்புகளின் முன்னாள் தளபதி ரூடி ரிடோல்ஃபி பேசியுள்ளார்.

பூமிக்கு விண்கலம் பாதுகாப்பாக இறங்குவதை உறுதிசெய்ய ஸ்டார்லைனர் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.

96 மணி நேர ஆக்சிஜன் விநியோகத்துடன் விண்வெளியில் விண்கலம் சிக்கிக் கொள்ளலாம்.

விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் முயற்சி தோல்வியடையலாம்.

விண்கலம் செங்குத்தான கோணத்தில் வளிமண்டலத்தில் நுழைந்தால் தரைப்பகுதியை அடைவதற்கு முன்பே தீப்பற்றி எரிந்து வீரர்கள் உயிரிழக்க நேரிடலாம் என்று தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!