கமலா ஹாரிஸ் கூட்டத்தில் ஒலித்த ஓம் சாந்தி சாந்தி எனும் இந்து மந்திரம்
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு இப்போது நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த மாநாட்டில் திடீரென மேடையில் இந்து மந்திரம் ஒலித்துள்ளது.
அங்கே மேடையேறிய கோயில் பூசாரி, மந்திரங்களைச் சொல்லி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மேலும், உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற வேத கருத்தை அமெரிக்கா பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சிகள் சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இதற்கிடையே இப்போது சிகாகோ மாநாட்டில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்களும் பேசினர்.
இதற்கிடையே இந்த சிகாகோ மாநாட்டில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு நடந்தது. அதாவது இந்த மாநாட்டின் 3வது நாளில் திடீரென மேடையேறிய ஒரு இந்து மத கோயில் பூசாரி ஒருவர் "ஓம் சாந்தி சாந்தி" என்று சொல்லி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அனைத்து தலைவர்களும் அதற்கு மரியாதை செலுத்தினர். மேரிலாந்தில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோவிலில் பூசாரி ராகேஷ் பட் என்பவர் தான் ஓம் சாந்தி சாந்தி என்று சொல்லி மாநாட்டைத் தொடங்கி வைத்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேசம் என்று வரும்போது,நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாடு என்று வரும் போது நம் மனம் ஒன்றாக இருக்கட்டும்.
நம் இதயங்கள் ஒன்றாகத் துடிக்கட்டும். சமூகத்திற்காக நாம் பாடுபட வேண்டும். அதுவே நம்மை பலம் வாய்ந்ததாக மாற்றும். அதுவே நமது நாட்டை பெருமைப்படுத்துவதாக இருக்கும்.