வரம்பற்ற வரிக் கொள்கையை நீக்க நாமல் உறுதி!
தனது நிர்வாகத்தின் கீழ் வரம்பற்ற வரிக் கொள்கைக்கு பதிலாக, சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய வரிக் கொள்கையொன்று அறிமுகப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கம்பஹா யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் திரு. நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கிராம மக்களை மகிழ்விப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தையும் மகிழ்விக்க வேண்டும்.
அந்த பொறுப்பை உணர்ந்த அரசியல் சக்தியாக நாம் இருக்கிறோம். மக்கள் வாங்கக்கூடிய வரிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
இந்த நாட்டின் நிறுத்தப்பட்ட வளர்ச்சியை மீண்டும் தொடங்குவோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விட்டுச் சென்ற இடத்திலிருந்து நாங்கள் தொடர்வோம்” எனக் கூறியுள்ளார்.