தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26.08) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட தினமாக செப்டெம்பர் 8ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4