நாட்டை அனைத்து வகையிலும் வளமான நாடாக மாற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்!
நாட்டை அனைத்து வகையிலும் வளமான நாடாக மாற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கம் என அதன் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், சட்டம், பொதுச்சேவை உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு தமது கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாலம்பேயில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். "நம் அனைவருக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது.
இந்த நாட்டை எதில் இருந்து பணக்கார நாடாக மாற்ற விரும்புகிறோம். இந்த நாடு பெரும் வறுமைக்கு ஆளாகியுள்ளது. நாம் ஒரு ஏழை நாடு. எல்லா வகையிலும் மோசமான நிலை. ஒன்றிணைந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கி இலங்கையை அனைத்து அம்சங்களிலும் வளமான நாடாக மாற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.