அனுரகுமார இலகுவாக வெற்றிபெறுவார்: வெளியாகியுள்ள தகவல் - மறுக்கின்றது இந்திய தூதரகம்
கொழும்பிலுள்ள தூதரங்களிற்கு இடையிலான தொடர்பாடல்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அமோக வெற்றிபெறுவார் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை இந்திய தூதரகம் அவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது.
பல வழிமுறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்புகள் அனுரகுமாரதிசநாயக்க இலகுவான வெற்றியை பெறுவார் என தெரிவித்துள்ளமை இராஜதந்திர மட்ட தொடர்பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக ஊடக தகவலொன்று தெரிவித்துள்ளது.
தேர்தல் இடம்பெறுவதற்கு 30 நாட்களிற்கு முன்னராக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அனுரகுமாரவின் அதிகரித்து வரும் ஆதரவை வெளிப்படுத்தும் பல குறிகாட்டிகள் காணப்படுவதாகவும் சமூக ஊடக தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் நிலைமை மாற்றமடைந்துள்ளது அவரே முன்னணியில்காணப்படுகின்றார்.கருத்துக்கணிப்பு முடிவுகள் அவர் ஏனைய வேட்பாளரை விட முன்னணியில் காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளன என இராஜதந்திர வட்டாரங்கள் மத்தியிலான தொடர்பாடல்கள் தெரிவித்துள்ளன என குறிப்பிட்ட சமூக ஊடக தகவல் தெரிவித்துள்ளது.
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவர் கணிசமான முன்னிலையில் இருப்பதற்கான முக்கியமான குறிகாட்டியாகஇது பார்க்கப்படுகின்றது.தேசிய மக்கள் சக்தி இன் ஒட்டுமொத்த ஆதரவுத் தளத்தில் ஒரு நிலையான அதிகரிப்பை கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டுகிறது.
இந்த வளர்ச்சியானது அனுரகுமாரதிசநாயக்க தலைமை மற்றும் கொள்கைகள் மீதான வலுவான வாக்காளர் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் கட்சியின் வேகத்திற்கு பங்களிக்கிறதுஎன குறிப்பிட்ட சமூக ஊடக தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு மாறாகஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவு குறைவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
பல ஐக்கிய மக்கள் சக்திஉறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு விசுவாசத்தை வெளியிட்டுள்ளஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்டது. இந்த போக்கு ஐக்கிய மக்கள் சக்தி யின் எண்ணிக்கையை பலவீனப்படுத்தியது மற்றும் முக்கிய உறுப்பினர்கள் மீண்டும்ஐக்கிய தேசியக் கட்சி க்கு திரும்பியது தேர்தல் நிலப்பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் வாய்ப்புகளை குறைப்பது மட்டுமன்றி நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் இயக்கவியலுக்கு மூலோபாய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியஐக்கிய தேசியக் கட்சி.யின் நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் எங்களை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் இவ்வாறான தகவல்கள் பரவுவதை நாங்கள் அவதானித்துள்ளோம்எனினும் இது ஆதரமற்றது உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளது.