தமிழ் மக்கள் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை இந்த தேர்தல் மூலம் சர்வதேசம் உணரவேண்டும்: தமிழ் பொது வேட்பாளர்

#SriLanka #Election #Tamil People
Mayoorikka
3 months ago
தமிழ் மக்கள் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை இந்த தேர்தல் மூலம் சர்வதேசம் உணரவேண்டும்: தமிழ் பொது வேட்பாளர்

தமிழ் பொதுக்கட்டமைப்பு சார்பாக சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தை இன்று ஆரம்பித்தார். பளையிலிருந்து தனது கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரச்சாரக்கூட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

பளை நகருக்கு வருகை தந்த வேட்பாளருக்கு தமிழ் பாரம்பரிய பறை மற்றும் மங்கள வாத்திய இசையோடு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 பளை பேருந்து நிலையத்தில் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து இயக்கச்சி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி நகர் சென்று இரணைமடு சந்தியில் பிரச்சாரக்கூட்டம் நிறைவடைந்தது. பளையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் வேட்பாளருடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 அரியநேந்திரன் இங்கு உரையாற்றிருந்தார்.

 1948 ம் ஆண்டு இலங்கை சுகந்திரம் அடைந்ததற்கு பின்பு உரிமையை வலியுறுத்தி அகிம்சையிலும் ஆயுத வழியிலும் போராடினோம் 2009 யுத்தம் மெளனிக்கப்பட்டதன் பின்பு இராஜந்திர ரீதியில் போராடுகின்றோம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் 8 வந்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆக இனப்பிரச்சனை தொடர்பாக பேசியிருக்கின்றோம். தீர்வு இல்லை ஏமாற்றப்பட்டோம் ஏமாற்றப்பட்டதன் வெளிப்பாடே இந்த முடிவு இனத்தின் வெளிப்பாடாகவே இந்த தேர்தல் அமைகிறது .

தமிழ் இனத்திற்காக பல்வேறு பொங்கு தமிழ் எழுக தமிழ் பொலி கண்டிமுதல் பொத்துவில் வரையான போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தேர்தலின் முடிவு இனத்தின் முடிவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். 

இங்கு உரையாற்றிய  சுரேஸ் பிரேமச்சந்திரன், 

 பல சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கின்றோம் தற்போது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை மறந்து பொருளாதார பிரச்சனையை மாத்திரம் காட்ட முனைகின்றனர். தமிழ் மக்களுக்கு சாதகமான அரசியல் தீர்வை வலியுறுத்தி வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் வடக்கு கிழக்கு இணைப்பின் புள்ளியாகவே பொது வேட்பாளர் கொழும்பு மற்றும் இராஜந்திரிகளுக்கு தமிழ்த்தேசிய பிரச்சனை உள்ளது என்பதை சொல்வற்காகவே 

 யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகின்றது .இனப்பிரச்சனையை தீர்க்க தவறினால் பொருளாதார மிக மோசமான நாடாக மாறும் தீர்க்காதன் காரணமாகவே பொருளாதார பிரச்சனை அனைவரும் சாதிமத பேதங்களை எங்கிருந்தாலும்வாக்களியுங்கள் தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமத்துவமாக வாழ பரந்தன் பகுதியிலும்

 அரியநேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

 தேர்தல் என்பது ஜனாதிபதிகதிரையில் அமர்வதற்கு நான் போட்டியிடவில்லை இலங்கை சுகந்திரம் அடைந்து 75வருடங்கள் ஆகின்றது. இனம் அடிமைப்பட்டு வாழ்கின்றது. 

நிலம் அபகரீப்பு, பண்பாட்டு படுகொலை, திட்டமிட்ட குடியிருப்பு இடம்பெறுகின்றது. மேய்ச்சல் தரைகூட பறிபோகிறது. இந்த விடயங்களை போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை காணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சனையுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுடன் பேசியிருக்கின்றோம் தீர்வு இல்லை தமிழ் மக்கள் ஒன்று பட்டிருக்கிறோம் என்பதை இந்த தேர்தல் மூலம் இந்தியா முதல் சர்வதேசம் உணரவேண்டும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!