கும்ப ராசியினர் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: நன்மையான நாள். வியாபாரத்தில் விருப்பம் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.பரணி: வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த வேலை தள்ளிப்போகும். முயற்சிக்கேற்ற வருவாய் வரும்.கார்த்திகை 1: யோகமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். திடீர் வரவினால் பொருளாதார நெருக்கடி நீங்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நினைப்பது நிறைவேறும் நாள். உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். பணவரவு திருப்தி தரும்.ரோகிணி: அதிர்ஷ்டமான நாள். மனக்குழப்பம் நீங்கும். தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செயல்களில் இழுபறி உண்டாகும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். மனக்குழப்பம் உண்டாகும். செயல்களில் நெருக்கடி ஏற்படும். வரவு செலவில் கவனம் தேவை.திருவாதிரை: வருவாயால் வளம் காணும் நாள். பண வரவில் இருந்த தடை நீங்கும். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: தடைகளை சந்திக்கும் நாள். நேற்றை பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். எதிர்ப்பு வலுக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
கடகம்:
புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். செலவு அதிகரிக்கும் என்பதால் செயல்களில் கவனம் தேவை.பூசம்: தெய்வ வழிபாட்டில் திருப்தி காணும் நாள். உங்கள் செயல்களால் வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.ஆயில்யம்: போட்டிகளை சந்திக்கும் நாள். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். வியாபாரத்தில் உங்கள் முயற்சி இழுபறியாகும்.
சிம்மம்:
மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதி நிலை உயரும்.பூரம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். திட்டமிட்ட வேலை தள்ளிப்போகும். யோசித்து செயல்படுவது நல்லது.உத்திரம் 1: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: அனுகூலமான நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் வரும். அஸ்தம்: லாபமான நாள். நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடை உண்டானாலும் இறுதியில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.சித்திரை 1,2: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் மற்றவரின் ஆலோசனைகளை ஏற்பீர்கள்.
துலாம்:
சித்திரை 3,4: அமைதி காக்க வேண்டிய நாள். உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். வரவேண்டிய பணம் இழுபறியாகும்.சுவாதி: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள். எதிர்பாராத பிரச்னை தேடிவரும். நேற்றைய எண்ணம் நிறைவேற தாமதமாகும்.
விருச்சிகம்:
விசாகம் 4: எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும்.அனுஷம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். குடும்ப நெருக்கடி குறையும். வருமானம் திருப்தி தரும்.கேட்டை: வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். நீங்கள் ஈடுபடும் செயலில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்.
தனுசு:
மூலம்: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்ப்பு விலகும். நினைத்ததை செய்து முடிப்பீர்.பூராடம்: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.உத்திராடம் 1: நட்புகளால் லாபம் காணும் நாள். நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: உங்கள் உழைப்பால் லாபம் காண்பீர். மறைமுகமாக தொல்லை கொடுத்தோர் விலகிச் செல்வர்.திருவோணம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும்.அவிட்டம் 1,2: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். செலவு செய்தும் நினைத்ததை சாதிக்க முடியாமல் சோர்வு அடைவீர். வரவு இழுபறியாகும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: இறை வழிபாட்டால் நன்மைக் காண வேண்டிய நாள் செயல்களில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.சதயம்: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.பூரட்டாதி 1,2,3: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் முயற்சி தள்ளிப்போகும். பிள்ளைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். யோசித்து செயல்படுவது நல்லது.
மீனம்:
பூரட்டாதி 4: வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.உத்திரட்டாதி: முன்னேற்றமான நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.ரேவதி: வியாபாரத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். போராடி வெற்றி அடைவீர். வரவு திருப்திதரும்.